பொது செய்தி

தமிழ்நாடு

வைக்கோல் வரத்து குறைவு

Added : டிச 27, 2020
Share
Advertisement
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் வைக்கோல் வரத்து,விலை குறைந்துள்ளது. இங்கு 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக சாகுபடி அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. நல்ல மகசூலும் கிடைத்துள்ளது. ஆனால் வைக்கோல் வரத்து குறைவாக உள்ளது. அதேநேரம் விலையும் கடந்தாண்டை காட்டிலும் குறைவாகவே உள்ளது. இது விவசாயிகளை

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் வைக்கோல் வரத்து,விலை குறைந்துள்ளது.

இங்கு 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக சாகுபடி அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. நல்ல மகசூலும் கிடைத்துள்ளது. ஆனால் வைக்கோல் வரத்து குறைவாக உள்ளது. அதேநேரம் விலையும் கடந்தாண்டை காட்டிலும் குறைவாகவே உள்ளது. இது விவசாயிகளை குழப்பம், தவிப்படைய வைத்துள்ளது. கொள்முதலுக்கென கேரளாவிலிருந்து வியாபாரிகள் குவிந்துள்ளனர். கம்பம், சுற்றுப்பகுதிகளில் இருந்து வைக்கோல் லாரிகளில் ஏற்றப்பட்டு எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் கூறுகையில், 60 சென்ட் நிலத்தில் விளையும் வைக்கோல் விலை ரூ. 3 ஆயிரம் கிடைக்கிறது. ஆனால் இதுவே கடந்தாண்டு ரூ. 4 ஆயிரம் வரை விலை கிடைத்தது. நிலம் ஈரமாக இருப்பதால் இயந்திரங்கள் மேலோட்டமாக நெல் அறுவடை செய்வதே வரத்து குறைக்கு காரணம். விலை குறைந்ததும் ஏமாற்றமடையச் செய்துள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X