பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து கால்வாயில் மண் அகற்றியதால் நிம்மதி

Added : டிச 27, 2020
Share
Advertisement
திருப்பூர்:மண்ணரை, மூளி குளத்துக்கான வரத்து கால்வாயில் கொட்டப்பட்டிருந்த மண், அகற்றப்பட்டது.திருப்பூர் அருகே, மண்ணரையில், 25.70 ஏக்கர் பரப்பளவில் மூளி குளம் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து அணைக்காடு பகுதியிலுள்ள தடுப்பணைக்கு வரும் நீர், 2.5 கி.மீ., நீள வாய்க்கால் மூலம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.மண்ணரை அடுத்த வரத்து கால்வாயருகே, மணியகாரம்பாளையம் பாலம் வரை,

திருப்பூர்:மண்ணரை, மூளி குளத்துக்கான வரத்து கால்வாயில் கொட்டப்பட்டிருந்த மண், அகற்றப்பட்டது.திருப்பூர் அருகே, மண்ணரையில், 25.70 ஏக்கர் பரப்பளவில் மூளி குளம் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து அணைக்காடு பகுதியிலுள்ள தடுப்பணைக்கு வரும் நீர், 2.5 கி.மீ., நீள வாய்க்கால் மூலம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.மண்ணரை அடுத்த வரத்து கால்வாயருகே, மணியகாரம்பாளையம் பாலம் வரை, மாநகராட்சியால், ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
200 மீ., துாரத்துக்கு, குளத்துக்கான வரத்து கால்வாயில், மண் கொட்டப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.இதனால், கால்வாய் சுருங்கியது; இதற்கு, ஆட்சேபனை தெரிவித்த தன்னார்வலர்கள்,'மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 'சர்வே' செய்து, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்' என, வலியுறுத்தினர்.விளைவாக, வரத்து கால்வாயில் கொட்டப்பட்டிருந்த மண், மாநகராட்சியால் அகற்றப்பட்டது. 'இதேபோன்று, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்' என, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X