அடிப்படை வசதி செய்யலாமே!திருப்பூர் - பாண்டியன் நகர், சத்திய காலனி முதல் காமராஜர் நகர் வரை ரோடு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.- பாபு, பாண்டியன் நகர்.தினமும் வீணாகும் குடிநீர்திருப்பூர், மங்கலம் ரோடு எஸ்.ஆர்., நகர் வடக்கில் குடிநீர் இரண்டு வாரங்களாக வினியோகம் செய்யப்படவில்லை. பல இடங்களில் பிரதான குழாயில் தொடர்ந்து குடிநீர் கசிவு ஏற்படுகிறது.- வேலுசாமி, எஸ்.ஆர்., நகர்.அதிகரித்த கொசு தொல்லைதிருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையத்தில் தேங்கி கிடக்கும் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. கடும் துர்நாற்றத்துடன், கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது.- சிவா, சர்க்கார் பெரியபாளையம்.பொதுமக்கள் அவஸ்தைஅவிநாசி, சிவசக்தி நகரில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்கள் அவ்வழியாக செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.- பிரபுகுமார், அவிநாசி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE