பல்லடம்:பல்லடம் அருகே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, பயனற்று கிடக்கிறது.பல்லடம் அருகே அறிவொளி நகரில், 17 'பிளாக்' கொண்ட அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 2015ல் கட்டப்பட்டது. மொத்தமுள்ள, 544 வீடுகளில், 256 வீடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. எஞ்சிய, 288 வீடு, பயனற்று, சிதிலமடைந்து வருகிறது.காலியாக உள்ள பிளாக்குகளில் அத்துமீறி நுழையும் சிலர், சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த, சில ஆண்டுகளாக கவனிப்பின்றி விடப்பட்டதால், அடுக்குமாடி குடியிருப்பின், 9 பிளாக்குகள் பயனற்ற நிலையில் உள்ளன.நீர்நிலை, புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசிப்பவர்களுக்கு மாற்றிடம் ஏற்படுத்தும் நோக்கில் தான், இத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அந்த அடிப்படையில், அத்தகைய நிலையில் வசிப்போரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு காலியாக உள்ள குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதவது;அரசியல் ஆதாயத்திற்காகவே புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்காலிகமாக வழங்கப்பட்ட அந்த இடத்தில் ஆண்டுக்கணக்கில் வசிக்கின்றனர். அரசியல்வாதிகளின் ஊக்குவிப்பால், தாங்கள் ஆக்கிரமித்த இடத்துக்கு பட்டா கேட்டு போராடுகின்றனர். எனவே, நீர்நிலை மற்றும் புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்; இப்பணியை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், தனி தாசில்தார் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE