பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு 'பளபள'; ஆனாலும், வழுக்கும்!

Added : டிச 27, 2020
Share
Advertisement
திருப்பூர்:பல்லடம் ரோட்டில் சிதறிக்கிடக்கும் மணல் குவியல், வாகன ஓட்டிகளை வழுக்கிவிட வைக்கிறது.திருப்பூரிலிருந்து, தென்னம்பாளையம், வீரபாண்டி பிரிவு வழியாக, பல்லடம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட், எஸ்.பி., அலுவலகம், எல்.ஆர்.ஜி., கல்லுாரி உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இந்த ரோட்டில் உள்ளன. இதனால், அதிகளவு
 ரோடு 'பளபள'; ஆனாலும், வழுக்கும்!

திருப்பூர்:பல்லடம் ரோட்டில் சிதறிக்கிடக்கும் மணல் குவியல், வாகன ஓட்டிகளை வழுக்கிவிட வைக்கிறது.திருப்பூரிலிருந்து, தென்னம்பாளையம், வீரபாண்டி பிரிவு வழியாக, பல்லடம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட், எஸ்.பி., அலுவலகம், எல்.ஆர்.ஜி., கல்லுாரி உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இந்த ரோட்டில் உள்ளன. இதனால், அதிகளவு வாகனங்கள், இந்த ரோட்டில் பயணிக்கின்றன.கலெக்டர் அலுவலக பகுதியிலிருந்து, வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டோரம் சேகரமான மணல் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். டூவீலரில் பயணிப்போர், வழுக்கி விழும் நிலையுள்ளது. எனவே, 'சிதறி கிடக்கும் மணலை அகற்ற வேண்டும்' என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X