திருப்பூர்: தமிழகத்தை சேர்ந்த, 18 வயதுக்கு மேற்பட்ட, சமூகநலன் சார்ந்த நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில், மேன்மையாக பணியாற்றுபவர்கள், மாநில அரசின், அவ்வையார் விருது பெற தகுதி பெறுகின்றனர். தகுதியுள்ளவர்கள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.சாலை அமைப்பு பணி மந்தம்அவிநாசி: அவிநாசி பேரூராட்சி சார்பில், கைகாட்டிபுதுார் முதல் ராயம்பாளையம் சாலை புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, சாலை முழுதும் பெயர்த்து எடுக்கப்பட்ட நிலையில், பணி துவங்குவதில் மிகுந்த காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். விரைவாக பணிகளை முடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.ரூ.37 லட்சத்துக்கு பருத்தி ஏலம்வெள்ளகோவில்: மூலனுார், வேளாண் விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 668 குவின்டால் பருத்தி வந்தது. முதல் தர பருத்தி ஒரு குவின்டால், 6,439, இரண்டாம் தரம், 5,300 ரூபாய்க்கு விற்பனையானது. 131 விவசாயிகள், 15 வியாபாரிகள் ஏல வர்த்தகத்தில் பங்கேற்றதில், 36 லட்சத்து 97 ஆயிரத்து 329 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட குவின்டாலுக்கு, 100 ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.திட்டக்குழு பயிற்சி முகாம்பொங்கலுார்: பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம வளர்ச்சி திட்டம் மற்றும் மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து, திட்ட குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பி.டி.ஓ., மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை பயிற்றுநர் சுதா, பயிற்சியஅளித்தார்.கமிஷனரிடம் ம.தி.மு.க., மனுதிருப்பூர்: ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் சிவபாலன் மற்றும் கட்சியினர், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் அளித்த மனுவில், 'ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் சந்திப்பில் இருந்து, தனலட்சுமி மில் பஸ் ஸ்டாப் வரை, ஒற்றைக்கண் பாலம் வளைவு வரை தெருவிளக்குகள் எதுவும் எரிவதில்லை. விபத்து நடந்து, உயிரிழப்பு ஏற்படும் முன் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.ஆட்டோ தொழிலாளர் மனுபல்லடம்: திருப்பூர் மாவட்ட ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், கலெக்டரிடம் அளித்த மனுவில், 'நான்கு சக்கர வாகனங்களில், விபத்தில் இருந்து தப்பிக்க இயலாத சூழல் ஏற்படும் என்பதை காரணம் காட்டி, பம்பர் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சில வாகனங்களில் 'ஏர் பேக்' கிடையாது. எனவே, கூடுதல் பம்பர் வைத்து இயக்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நீட்டிப்புதிருப்பூர்: கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், சேலம் வழியாக பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. டிச., 31ம் தேதியுடன் ரயில் இயக்கம் நிறைவடைய இருந்தது. ஆனால், 'ஜன., 31 வரை இயங்கும்; இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது' என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.கூடுதல் பணியாளர் நியமனம்திருப்பூர்: குமார்நகர் மின்நுகர்வோர் ேசவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர், '1912' எண்ணில் தொடர்பு கொண்டு, மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம். ஒரே நேரத்தில், 10 அழைப்பை ஏற்கும் வகையில், சேவை மையம் அமைக்கப்பட்டாலும், ஆறு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். மின்தொடர்பான புகார் அதிகரிக்கும் நிலையில், கூடுதலாக நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆற்றங்கரையில் அலங்கோலம்வெள்ளகோவில்: மயில்ரங்கத்தில் , அமராவதி ஆற்றங்கரையை பார், ஆக மாற்றும் குடிமகன்களால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மணல் பரப்பாக உள்ளதால், 'குடி' மகன்கள் மாலை, இரவு நேரங்களில், மது அருந்துகின்றனர். அதன்பின், பாட்டில், தின்பண்டங்களை வீசி செல்கின்றனர். இதனால், ஆற்றங்கரை அலங்கோலமாக மாறி விட்டது. இதனை தடுக்க வேண்டும்.சுமங்கலி பூஜை வழிபாடுபொங்கலுார்: பொங்கலுார் அருகே அலகுமலையில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சுமங்கலி பூஜை நடந்தது. திருமணம் ஆகாத பெண்களின் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுள் பெறவும் பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர். கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசி வழங்கினார்.கோவில் அருகே சுகாதார சீர்கேடுவெள்ளகோவில்: குமாரவலசு ரோட்டில், துவக்கப்பள்ளி, ஐயப்பன் கோவில் இடையே கொட்டப்படும் கோழி கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கோழி கழிவுகளை உட்கொள்ளும் நாய்கள், அவற்றை, ரோட்டின் மையத்துக்கு இழுத்து சென்று போட்டு விடுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கோழி இறைச்சி கழிவு கொட்டுவோர் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE