பொது செய்தி

தமிழ்நாடு

உபகோட்ட மின்வாரிய அலுவலகம் திருப்பூருடன் இணைக்கப்படுமா?

Added : டிச 27, 2020
Share
Advertisement
திருப்பூர்:'குன்னத்துார், மங்கலம் உள்ளிட்ட உபகோட்ட மின்வாரிய அலுவலகங்களை, திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த, 2009ல், திருப்பூர் மாவட்டம் உதயமானது. அப்போது குன்னத்துார், ஊத்துக்குளி, வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை

திருப்பூர்:'குன்னத்துார், மங்கலம் உள்ளிட்ட உபகோட்ட மின்வாரிய அலுவலகங்களை, திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த, 2009ல், திருப்பூர் மாவட்டம் உதயமானது. அப்போது குன்னத்துார், ஊத்துக்குளி, வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலகங்களும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
அதேநேரம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னத்துார், மங்கலம் உபகோட்ட மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள், திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துடன் இணைக்கப்படவில்லை. இதனால், மின் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண, ஈரோடு மற்றும் கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களுக்கு, மின் நுகர்வோர் செல்ல வேண்டியிருக்கிறது.
பலரும், பணி நிமித்தமாக திருப்பூர் வந்து செல்லும் நிலையில், மின் சார்ந்த பணிகளை மேற்கொள்ள, வெகு துாரம் செல்ல வேண்டியுள்ளதால், அவர்களுக்கு அலைச்சல் அதிகமாகிறது. எனவே, குன்னத்துார், மங்கலம் உபகோட்ட மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையங்களை, திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்,' என அப்பகுதி மின் நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X