பல்லடம்:'சூழலை மேம்படுத்தும் தேனீக்களால், விவசாயிகளின் வருமானம் உயரும்' என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் அடுத்த பொங்கலுார் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சந்திரகவிதா, முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேனி வளர்ப்பு குறித்து பேராசிரியர் கவிதா பேசுகையில், 'தேனீக்கள் இல்லையெனில், இவ்வுலகில் மனித இனம் இல்லை. பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால், பூக்கள் பயிரிடும் போது, அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு. சூழலை மேம்படுத்தும் தேனீக்களால், விவசாயிகளின் வருமானம் உயரும். நல்ல வடிகால் வசதியுடன் திறந்த இடங்கள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு அருகில், தேன் கூடு அமைப்பது அவசியம். 2,000 அடி துாரத்தில் உள்ள பூக்களின் வாசனையை கூட நுகர்ந்து அறிந்து கொள்ளும் ஆற்றல், தேனீக்களுக்கு உண்டு. தேனி வளர்ப்பால் தென்னையில், 30 சதவீதம், காய்கறி பயிர்களில், 40 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE