பொது செய்தி

தமிழ்நாடு

நமக்கு பொங்கல் பரிசு

Added : டிச 27, 2020
Share
Advertisement
கோவை:'ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன், வரும்,30 வரை வழங்கப்படும்; 4 முதல், 12 வரை பொருட்கள் வினியோகிக்கப்படும்' என, மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில், 10 லட்சத்து, 46 ஆயிரத்து, 168 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், 10 லட்சத்து, 9 ஆயிரத்து, 799, அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசாக, தலா, 2,500 ரூபாய் வீதம், 252 கோடியே, 44 லட்சத்து, 97

கோவை:'ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன், வரும்,30 வரை வழங்கப்படும்; 4 முதல், 12 வரை பொருட்கள் வினியோகிக்கப்படும்' என, மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், 10 லட்சத்து, 46 ஆயிரத்து, 168 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், 10 லட்சத்து, 9 ஆயிரத்து, 799, அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசாக, தலா, 2,500 ரூபாய் வீதம், 252 கோடியே, 44 லட்சத்து, 97 ஆயிரத்து, 500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல கடைகளுக்கு பொதுமக்கள் கூட்டமாகச் சென்று டோக்கன் பெறுகின்றனர்.
மாவட்ட வழங்கல் துறையினர் கூறுகையில், 'கோவையில் டோக்கன் வினியோக பணிகள் துவங்கியுள்ளன. ஜன., 4 முதல் பொருட்கள் கிடைக்கும். தெருவாரியாக பட்டியலிட்டு பொருட்கள் வழங்கப்படும். முக கவசம் அணிந்து வர வேண்டும்; சமூக இடைவெளியில் நின்று, பெற்றுச் செல்ல வேண்டும். முறைகேடு நடைபெறாமல் கண்காணிக்க, துணை கலெக்டர் தலைமையில், வழங்கல், கூட்டுறவு துறையின் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 'கண்காணிப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்கள் விரைவில் வெளியிடப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொருட்கள் வாங்காதவர்கள், 13ம் தேதி பெற்றுக்கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X