தமிழ்நாடு

சரிசெய்யுங்க! தண்ணீர் பற்றாக்குறையில் அரசு மருத்துவமனைகள்.... டயாலிஸிஸ் போன்ற சிகிச்சை பெற முடியாது அவதி

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் டயாலிஸிஸ் போன்ற சிகிச்சை பெற முடியாது நோயாளிகள் தவிக்கும் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கூடுதல் குடிநீர் இணைப்புகள், போர்வெல்கள் அமைத்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பரபரப்பான இன்றைய உலகில் முறையான உணவுபழக்கங்களை கடைபிடிக்காமலும், அதிக

ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் டயாலிஸிஸ் போன்ற சிகிச்சை பெற முடியாது நோயாளிகள் தவிக்கும் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கூடுதல் குடிநீர் இணைப்புகள், போர்வெல்கள் அமைத்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பரபரப்பான இன்றைய உலகில் முறையான உணவுபழக்கங்களை கடைபிடிக்காமலும், அதிக வேலைப்பளுவாலும் இன்றைய மனித சமுதாயம், ரத்த அழுத்தம், சுகர், உடல்பருமன், மன அழுத்தம் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பாதிக்கபட்ட ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதார வசதிகளுக்கேற்ப தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

தற்போதைய பொருளாதாரசூழலில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைபேறு, எலும்பு முறிவு மற்றும் பல நோய்களுக்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கிறது.இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பல லட்சம் ரூபாய் செலவில் டயாலிஸிஸ் மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2 முதல் 3 பேர் வரை தினமும் டயாலிஸிஸ் செய்து கொள்ளலாம். இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் நிலையில் போதியளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கருவிகள், டாக்டர்கள் இருந்தும் பாதிக்கபட்டவர்கள் சிகிச்சை பெற இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் மையங்கள் தொய்வின்றி செயல்படவும், உள் நோயாளிகள் பயன்பாட்டிற்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X