சமைப்பதிலும் அதை சுவைப்பதிலும் இருக்கும் சந்தோஷம், 'உணவுப் பிரியர்கள்' மட்டுமே அறிந்தது. இப்படி அவர்கள் அனுபவித்து சாப்பிட திருப்பூர், ராக்கியாபாளையம் ரோடு வாரணாசி தியேட்டர் அருகே இருக்கவே இருக்கு, ரிச்சி ரெஸ்ட்டாரன்ட்.சைனீஸ், தந்துாரி, தென்னிந்திய உணவுகளை சைவம், அசைவம் இரண்டிலும் வெளுத்துக்கட்ட நினைப்பவர்கள் நேராக செல்வது இங்கேதான். சிக்கன், மட்டன், பிஷ் என அனைத்து வெரைட்டி பிரியாணி, மீல்ஸ்களும் சைடு டிஷ்கள் விற்பனை பட்டையை கிளப்புது. பள்ளிபாளையம் சிக்கன், டைனமைட் சிக்கன், 777, ஹாட் பெப்பர் சிக்கனின் ருசிக்கு எக்கச்சக்க விசிறிகள் உருவாகி விட்டனர். இது குறித்து உரிமையாளர் கோபால் கூறியதாவது:பிரியாணி வெரைட்டீஸ்க்கு மவுசு அதிகம். இங்கு செக்கில் ஆட்டிய எண்ணெய்களே சேர்க்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு மஞ்சூரியன் ரகங்கள், லாலிபப் வெரைட்டீஸ்கள் உள்ளன. மற்ற கடைகளுடன் ஒப்பிடுகையில், 10-20 ரூபாய் வரையில் விலை குறைவாகவே இருக்கும். காலை, 11:00 மணி முதலே தந்துாரி வகைகள் கிடைக்கும்.ரம்மியமான சுற்றச்சூழலில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட சரியான இடம். பார்க்கிங் வசதி உண்டு. ஜோமேடோ, ஸ்விக்கியில் ஆன்லைன் ஆர்டர் செய்யலாம். டிச., 31க்குள் வருவோருக்கு, பில் கட்டணத்தில், 10 சதவீத ஆபர் உண்டு.வரும் ஜன., முதல் பல காம்போ ஆபர்களை அறிவிக்க உள்ளோம். சிக்கனில், 2 வெரைட்டி, பிஷ் வகைகளில் - 2, தந்துாரி வகையில் ஒரு லெக் பீஸ், ரொட்டி அல்லது நாண், வெஜ் அல்லது சிக்கன் ரைஸ் சேர்த்து, 499 ரூபாய்க்கு சாப்பிடலாம்!இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE