கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதும், அமெரிக்காவில் லால் ஏஞ்சல்ஸ், நியூயார்க் திரைப்படவிழாக்களில் பங்கேற்ற, 'அற்றைத்திங்கள்' எனும், 45 நிமிட குறும்படத்தை திருப்பூரை சேர்ந்த செந்துார் ரத்னம் இயக்கியுள்ளார்.இதன் வெளியீட்டு சிறப்பு கூட்டம் நடந்தது. மக்கள் மாமன்ற அமைப்பு தலைவர் சுப்ரமணியம் தலைமையில், 'பவர் ஆப் இம்பேக்ட்' மக்கள் நலவாழ்வு அறக்கட்டளை தலைவர் ஸ்ரீராம் வெளியிட, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெற்று கொண்டார்.இயக்குனர் செந்துார் ரத்னம் கூறுகையில், ''இது என் முதல் முயற்சி. இளைஞர்களின் எல்லா வகை முயற்சிகளுக்கும் ஊக்கம் தரும் வகையில் திரைப்பட உலகம் விரிந்து வருகிறது. தொடர் உழைப்பின் மூலம் இதை சாதிக்கலாம். கொரோனா கால சோர்வை மீறி சுயாதீன திரைப்பட முயற்சிகள் இளைஞர்களிடம் அதிகரித்து தமிழ் திரைப்பட முயற்சிகளில் நல்ல ரசனை மாற்றம் உண்டாகியுள்ளது. இதற்கு இணையதளங்களில் வெளியாகும் நல்ல படங்கள் சாட்சி,'' என்றார்.விழாவில், தயாரிப்பாளர் ரத்தினம், கவிஞர் ஆழ்வைக்கண்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். எழுத்தாளர் சீனு சிந்து எழுதிய, 'தங்கம், வாழ்வில்' எனும் இரு நுால்கள் வெளியிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE