பல்லடம்:கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பனியின் ஈரப்பதத்துக்காக காத்திருக்கின்றனர்.பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், பனிக்கடலை எனப்படும் கொண்டைக்கடலை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பல்லடம் வட்டாரத்தில், களிமண் பூமி அதிகளவில் இருப்பதால், பெருமளவு பரப்பில் பனிக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.மானாவாரி நிலத்தில், ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் விழும் பனியின் ஈரப்பதத்தை நம்பியே, விவசாயிகள் பனிக்கடலை சாகுபடி செய்கின்றனர். இதற்காக, 8 மாதம் வரை மாற்றுப்பயிர் எதுவும் சாகுபடி செய்யாமல், நிலம் காலியாக விடப்படும். வட கிழக்கு பருவமழை காலத்தில், பனிக்கடலை விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது;வட கிழக்கு பருவமழையால், ஈரமாக உள்ள நிலத்தில், உரத்துடன் சேர்த்து பனிக்கடலை விதைப்பு மேற்கொள்ளப்படும்; களை பறிப்பு பணி முக்கியமானது. செடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்து, பிஞ்சு காயாகி, நான்காவது மாதத்தில் அறுவடை செய்யப்படும். ஏக்கருக்கு, 600 கிலோவுக்கு மேல் கிடைக்கும்.பொள்ளாச்சி உடுமலை பகுதிகளில், மழை அதிகம் என்பதால், அப்பகுதிகளில், 800 கிலோ வரை கிடைக்கிறது. கிலோ, 50 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் ஓரளவு லாபம் கிடைக்கும். பருவ மழையால், ஓரளவு ஈரப்பதம் உள்ளது. அறுவடைக்கு, இன்னும் இரு மாதம் உள்ளதால், செடிகளுக்கு பனியால் கிடைக்கும் ஈரப்பதம் அவசியமாகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE