வெள்ளகோவில்:முத்துார் அருகே, மைய தடுப்பில் மோதிய லாரியால், போலீஸ் பிடியில் சிக்காமல் தப்ப முயன்ற இளைஞர்கள் சிக்கினர்.கோவையிலிருந்து, திருக்கோவிலுாருக்கு சிமென்ட் கற்கள் ஏற்றி வந்த லாரி, நேற்று முன்தினம், ஒரு மணிக்கு, முத்துார் அருகே மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியை, தர்மபுரி மாவட்டம், ஆர். கோபிநாதம்பாளையத்தை சேர்ந்த உதயகுமார். 34. ஓட்டி வந்துள்ளார். முத்துார்,- காங்கேயம் ரோட்டில், கணேசபுரம் பகுதியில் மைய தடுப்பு சுவரில் மோதி, விபத்துக்குள்ளானது. லாரியின், டயர் கழண்டது; டீசல் டேங்க் உடைந்து. மைய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த, கான்கிரீட் கற்கள் உடைந்து சேதமடைந்தன. இந்நிலையில், முத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.போலீசார் தடுத்தும் நிற்காமல், டூவீலரில் பயணித்த, 2 வாலிபர்கள், விபத்து ஏற்பட்ட மைய தடுப்பில் மோதி கீழே விழுந்து காயமடைந்தனர். வெள்ளகோவில் போலீசார், விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE