பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பொலிவு பெறும் குமரன் நினைவு பூங்கா

Added : டிச 27, 2020
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருப்பூர், குமரன் நினைவு பூங்கா பராமரிக்கப்பட்டு, நாளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி, பி.என்., ரோட்டில், சுதந்திர போராட்ட தியாகி குமரன் நினைவு மாநகராட்சி பூங்கா உள்ளது. பூங்கா பராமரிப்பின்றி, முட்புதர்மண்டி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சூதாட்டம், மது அருந்துவது போன்ற செயல்கள் நடந்து
 புதுப்பொலிவு பெறும் குமரன் நினைவு பூங்கா

அனுப்பர்பாளையம்:திருப்பூர், குமரன் நினைவு பூங்கா பராமரிக்கப்பட்டு, நாளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி, பி.என்., ரோட்டில், சுதந்திர போராட்ட தியாகி குமரன் நினைவு மாநகராட்சி பூங்கா உள்ளது. பூங்கா பராமரிப்பின்றி, முட்புதர்மண்டி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சூதாட்டம், மது அருந்துவது போன்ற செயல்கள் நடந்து வருகிறது.'பூங்காவை பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, பொதுமக்கள் வலி யுறுத்தி வந்தனர். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தினர், பூங்காவை தத்தெடுத்து, பரா மரிக்க முடிவெடுத்தனர்.லயன்ஸ் சங்கம் சார்பில், 20 லட்ச ரூபாய் செலவில், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, இருக்கை, சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், புல்தரை, குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.இதன் திறப்பு விழா, நாளை, 28ம் தேதி காலை நடக்கிறது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், எம்.எல்.ஏ. விஜயகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கருணாநிதி, மத்திய லயன்ஸ் சங்க தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X