பல்லடம்:இரண்டு ஆண்டு ஆகியும் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை என, பல்லடம் அருகே கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் - மீனாம்பாறை செல்லும் வழியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை வசதி செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டோரங்களில் தேங்குவதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.கழிவுநீர் செல்லும் வழித்தடத்தில் செடிகள், புதர் போல் வளர்ந்துள்ளன. ஓராண்டுக்கு முன் ரோடு அமைக்கும் பணி நடந்த போது, மழைநீர் வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இருப்பினும், இன்று வரை ஏற்படுத்தப் படவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், மழைநீர் வடிகால் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE