சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கம்பி எண்ணும் கணவன்

Added : டிச 27, 2020
Share
Advertisement
திருப்பூர்:மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், 34; கூலி தொழிலாளி. மனைவி சித்ராதேவி, 27. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடால், கடந்த ஒன்றரை ஆண்டாக, தம்பதியர் பிரிந்து வசித்து வருகின்றனர்.நேற்று காலை, சித்ராதேவி அங்குள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த

திருப்பூர்:மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.தாராபுரம் அருகேயுள்ள தளவாய் பட்டிணத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், 34; கூலி தொழிலாளி. மனைவி சித்ராதேவி, 27. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடால், கடந்த ஒன்றரை ஆண்டாக, தம்பதியர் பிரிந்து வசித்து வருகின்றனர்.நேற்று காலை, சித்ராதேவி அங்குள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மகுடேஸ்வரன், வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தன் கையிலிருந்த அரிவாளால், சித்ராதேவியை வெட்டி கொலை செய்ய முயன்றார். படுகாயமடைந்த சித்ராதேவி, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகுடேஸ்வரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X