புதுடில்லி: தொழில் செய்வதற்கான சீர்த்திருத்தங்களை செய்துள்ள ராஜஸ்தான் அரசுக்கு, கூடுதலாக, 2,731 கோடி ரூபாய் கடன் பெற, மத்திய நிதித் துறை, நேற்று அனுமதி வழங்கியது.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் வகையில், ஜி.எஸ்.டி.பி., எனப்படும், மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து, மாநிலங்களுக்கு பெறும் கடன் வரம்பை, 2 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்தது.எனினும், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல், தொழில் செய்வதை எளிதாக்கும் சீர்த்திருத்தம் போன்றவற்றை செய்யவும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், எளிதில் தொழில் செய்வதற்கான சீர்த்திருத்தங்களை, ராஜஸ்தான் அரசு செய்துள்ளது.

இதையடுத்து, அந்த சீர்த்திருத்தங்களை ஏற்கனவே செய்துள்ள ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் தெலுங்கானாவுடன், ஆறாவது மாநிலமாக, ராஜஸ்தானும் இணைந்துள்ளது. இந்த ஆறு மாநிலங்களுக்கும், கூடுதலாக, 19 ஆயிரத்து, 459 கோடி ரூபாய் கடன் பெற, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தொழில் செய்வதற்கான சீர்த்திருத்தங்களை செய்துள்ள ராஜஸ்தான் அரசு, கூடுதலாக, 2,731 கோடி ரூபாய் நிதியை கடனாக பெற, தகுதிபெற்றுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE