எத்தனை ஆண்டுகள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறோம். 'தினமலர்' நடத்தும் போட்டி மூலம், முதன்முறையாக, எங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. குடும்பத்தினர் மட்டுமின்றி, 'அப்பார்ட்மென்ட்'வாசிகள் அனைவரும் பாராட்டியது, மனதுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இப்போட்டி மூலம் நவீன காலத்துக்கேற்ப, 'கிரியேட்டிவிட்டி'யான கோலங்களை போட கற்றுக்கொண்டோம்.-யுவராணி, திருவள்ளுவர் நகர், வடவள்ளி.உறவுகளை புதுப்பித்தோம்பள்ளி, கல்லுாரி, வேலை என, அனைவரும்வாரம் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்போம். பக்கத்து வீட்டுக்காரர்களிடம், சில வார்த்தைகள் தவிர, அதிகமாக பேசியது கிடையாது. ஆனால், 'தினமலர்' கோலப்போட்டி மூலம், மற்ற குடும்பத்தினரை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஆலோசனை பகிர்ந்து, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டோம்.மதுமதி, திருவள்ளுவர் நகர், வடவள்ளி.பாரம்பரியம் காக்கப்படும்கோலங்கள் அழகுக்கானவையல்ல. கால் பதித்து நடக்கும் நம் நிலத்துக்கு நாம் அளிக்கும் மரியாதை. தேனி, மேல்மங்கலத்தில் பிரசித்தி பெற்ற மணக்கோலத்தை போட்டிருந்தேன். போட்டியில் நிறைய குழந்தைகள் கலந்துகொண்டனர். நம் கலாசாரத்துடன் இணைந்த கோலங்கள், அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருந்தது.-பவானி, ஐ.ஓ.பி., காலனி, மருதமலை ரோடு.மனஅழுத்தத்துக்கு மருந்து'கொரோனா' சூழ்நிலையால், ஒருவிதமான மன இறுக்கத்தில் இருந்தோம். மினி திருவிழாவாக நடந்த கோலப்போட்டி மூலம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பணம் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை உணர்த்தும் கோலத்தை போட்டிருந்தேன். நான் உணர்ந்த இந்த கருத்தை, மற்றவர்களுக்கு உணர்த்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.-கவுசல்யா, ஐ.ஓ.பி., காலனி, மருதமலை ரோடு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE