சென்னை, கிண்டியை சேர்ந்தவர் அஸ்வின்,27; தனியார் நிறுவன ஊழியர். கோவை சித்தாபுதுார், சின்னசாமி நாயுடு ரோட்டில், மொபட்டை நிறுத்தி விட்டு, அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றார். இதை நோட்டமிட்ட ஒரு வாலிபர், மொபட்டை திருடிக்கொண்டு தப்ப முயன்றார். அதை கவனித்த அஸ்வின், நண்பர்கள் மூலம் அவரை பிடித்து, காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், சிங்காநல்லுார் கள்ளிமடையை சேர்ந்த அகிலன், 24 என தெரிந்தது. அவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.மொபைல்போன் வழிப்பறிகோவை, கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் இசாத். கரும்புக்கடை, சுங்கச்சாவடி அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், இசாத் மொபைல்போனை பறித்துச் சென்றனர். அவர்களை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம், அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குனியமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
கல்லுாரி மாணவர்கள் மீது வழக்குபேரூர் அடுத்த விராலியூரில் உள்ள தனியார் கல்லுாரி எதிரில் செயல்படும் ஓட்டலில், புரோட்டா மாஸ்டராக, ஆலாந்துறையை சேர்ந்த குமார்,35, பணிபுரிகிறார். கல்லுாரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மூன்று பேர், ஓட்டலுக்கு சென்றுள்ளனர். புரோட்டா மாஸ்டருடன் தகராறில் ஈடுபட்டு, தாக்கியுள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில், மாணவர்கள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மில் அதிகாரி ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'அன்னுாரில் உள்ள தனியார் மில்லில், பயிற்சி அலுவலராக பணிபுரிபவர் பண்பரசன்,32. இவரது மனைவி பிரீத்தி,28, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த, நவ., 15ல், மில் குடியிருப்பில் துாக்கிட்டு பிரீத்தி தற்கொலை செய்தார்.
ஆர்.டி.ஓ., விசாரணையில், பண்பரசனுக்கு, வேறு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை, பிரீத்தி கண்டித்ததால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, தற்கொலை செய்தது தெரிந்தது. தற்கொலைக்கு துாண்டியதாக, பண்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் விடுவிக்கக்கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை, 'டிஸ்மிஸ்' செய்து, நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
வியாபாரி துாக்கிட்டு தற்கொலை
சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் புனிதகுமார்,43. இவருக்கு ஜெசி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புனிதகுமார் நடத்தி வந்த, 'ஆன்லைன்' வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டது; விரக்தி அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE