பேரூர்:கத்தியை காட்டி கடத்தப்பட்ட கார், மாதம்பட்டி - சிறுவாணி ரோட்டில், நேற்று மீட்கப்பட்டது.கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம், 50, டிரைவர் சம்சுதீனுடன், கோவையில் இருந்து கேரளா நோக்கி நேற்று முன்தினம் சென்றார். நவக்கரை அருகே, கார்களில் வந்த மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, கார் மற்றும் பல லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது. அக்கும்பலை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டன.காளம்பாளையம் சிறுவாணி ரோட்டில், இரண்டு மொபைல் போன்கள் கிடந்தன. அதை எடுத்த, ஒரு லாரி டிரைவர், செல்வபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர்களின் மொபைல் போன்கள் என்பது தெரியவந்தது.தனிப்படை போலீசார், சிறுவாணி ரோட்டில், நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். கடத்தப்பட்ட கார், மாதம்பட்டி சிறுவாணி ரோட்டில் நின்றிருந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சுற்றுப்பகுதி கிராமங்களில் விசாரித்து வருகின்றனர். காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில், விபத்து ஏற்படுத்தியதற்கான தடயங்கள் காணப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE