பொது செய்தி

தமிழ்நாடு

தாம்ப்ராஸ் சங்க செயற்குழு

Added : டிச 27, 2020
Share
Advertisement
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்), மாவட்ட செயற்குழு கூட்டம், கோவை சாய்பாபா காலனியில் நடந்தது; மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். பொது செயலாளர் குருராஜன் வரவேற்றார். கூட்டத்தில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்), மாவட்ட செயற்குழு கூட்டம், கோவை சாய்பாபா காலனியில் நடந்தது; மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். பொது செயலாளர் குருராஜன் வரவேற்றார். கூட்டத்தில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களின் சேவைகளுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் சம்புகுமார் உள்ளிட்ட, கிளை தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.சனிப்பெயர்ச்சி சிறப்பு வேள்விகோவை, ராமநாதபுரம், 80 அடி ரோட்டில், 400 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 51 மூர்த்திகளுடன் நவகிரகம் தம்பதியினருடனும், பிற தெய்வங்களும் தங்கள் தம்பதியினருடன் அருள்பாலிக்கும் சன்னதிகள் உள்ளன. சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை, 8:00 மணிக்கு, வேள்வியும், 10:00 மணிக்கு, திருமஞ்சனமும் நடக்கின்றன.பென்ஷனர் தின விழாஅகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு, கோவை வடக்கு கிளை சார்பில், பென்ஷனர் தின விழா, சரவணம்பட்டியில் நடந்தது; சங்க தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவராமலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில், 75 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜண்ணன் நினைவு பரிசு வழங்கினார். அமைப்பு செயலாளர் தங்கராஜூ, மாநில பொருளாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டுதி.மு.க., ஆட்சி காலத்தில், கோவையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சமயத்தில், பீளமேடு ஹட்கோ காலனியில் அமைத்த, செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை, எம்.எல்.ஏ., கார்த்திக் நேற்று ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சியில் அமைத்த பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை. அவை, மக்களுக்கு பயன்படாத வண்ணம் சிதிலம் அடைந்துள்ளன. பணத்தை கொள்ளையடிப்பதிலேயே அ.தி.மு.க.,வினர் குறியாக உள்ளனர்,'' என்றார்.முப்பெரும் விழாசெல்வபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் சார்பில், முன்னாள் மாணவர் மன்ற நண்பர்களின் சங்கமம், 2021 புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் தமிழர் திருநாள் உற்சாக வரவேற்பு ஆகிய முப்பெரும் விழா, இன்று நடக்கிறது. இவ்விழா, பேரூர் ரோடு, தெலுங்குபாளையத்தில் உள்ள, மணிமருதாசலம் தோட்டத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X