பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் ரோஷம்; ரூ.27 ஆயிரம் அபராதம் வசூல்

Added : டிச 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:'புல் பார்'கள் பொருத்தி இயக்கப்படும் கார், சரக்கு வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை உத்தரவுப்படி, அபராதம், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை காந்திபுரம், அவிநாசி ரோடு சிக்னல்கள், லட்சுமி மில்ஸ் என பல்வேறு பகுதிகளில் நேற்று சோதனை நடந்தது.போக்குவரத்து விதிமீறிய கார் உள்ளிட்ட, 27 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த புல் பார்கள் பறிமுதல் செய்யப்பட்டு
 அதிகாரிகள் ரோஷம்; ரூ.27 ஆயிரம் அபராதம் வசூல்

கோவை:'புல் பார்'கள் பொருத்தி இயக்கப்படும் கார், சரக்கு வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை உத்தரவுப்படி, அபராதம், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை காந்திபுரம், அவிநாசி ரோடு சிக்னல்கள், லட்சுமி மில்ஸ் என பல்வேறு பகுதிகளில் நேற்று சோதனை நடந்தது.போக்குவரத்து விதிமீறிய கார் உள்ளிட்ட, 27 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த புல் பார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிககப்பட்டது. இப்பணியில், ஆர்.டி.ஓ.,கள் சரவணன் (தெற்கு), சிவகுருநாதன் (வடக்கு), குமாரவேல் (மேற்கு), பாஸ்கரன் (மையம்) ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.ஆர்.டி.ஓ., பாஸ்கரன் கூறியதாவது: வாகனத்தில் பொருத்தப்படும் கடின தன்மையுடைய 'புல் பார்', எதிரே வரும் வாகனங்கள், மக்களுக்கும் பாதிப்பு தரும் என்பதால், அனைவரது நலன் கருதி வாகன உரிமையாளர்களே அகற்றிக்கொள்ள வேண்டும். விதிமீறலுக்கு, குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.முதல்முறை என்பதால், நேற்று ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் விதிமீறும் பட்சத்தில், அதிகபட்சம், 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும், தொடர்ந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-டிச-202006:52:31 IST Report Abuse
Ram Pollachi கம்பி விலை ஏறாமல் என்ன செய்யும். இதை குடிசை தொழில் போல் செய்து கடையில் விற்கிறார்கள். முதலில் ஆட்டோமொபைல் கடைகளுக்கு நல்ல உபதேசம் செய்யவும் பிறகு தானாக சரியாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X