பேரூர்:கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, சுற்றுலா பயணிகளுக்காக, இன்று முதல் திறக்கப்படுகிறது.'கொரோனா' பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்ததையடுத்து, சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் மராமத்து பணி நடந்து வந்தது. இன்று முதல், சுற்றுலா பயணிகளுக்காக, திறக்கப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும். உடல் வெப்பநிலை சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். வாகனத்தில் அழைத்துச் செல்லும்போதும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE