பொது செய்தி

இந்தியா

பயணியர் ரயில் சேவை வருவாய் 87 சதவீதம் குறைவு

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: “இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, பயணியர் ரயில் சேவைகள் வாயிலாக, 4,600 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 87 சதவீதம் குறைவு,” என, ரயில்வே வாரிய தலைவர் யாதவ் நேற்று தெரிவித்தார்.ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ், டில்லியில் நேற்று பேட்டியளித்தார்; அப்போது அவர் கூறியதாவது:பயணியர் ரயில் சேவைகள் வாயிலாக, கடந்த ஆண்டு, 53 ஆயிரம் கோடி ரூபாய்,

புதுடில்லி: “இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, பயணியர் ரயில் சேவைகள் வாயிலாக, 4,600 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 87 சதவீதம் குறைவு,” என, ரயில்வே வாரிய தலைவர் யாதவ் நேற்று தெரிவித்தார்.



latest tamil news


ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ், டில்லியில் நேற்று பேட்டியளித்தார்; அப்போது அவர் கூறியதாவது:பயணியர் ரயில் சேவைகள் வாயிலாக, கடந்த ஆண்டு, 53 ஆயிரம் கோடி ரூபாய், வருவாயாக கிடைத்தது. இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, பயணியர் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.இதன் விளைவாக, 4,600 கோடி ரூபாயாக, அதன் வருவாய் குறைந்தது; இது, 87 சதவீத சரிவு. எனினும், சரக்கு ரயில் சேவைகள் வாயிலாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக வருவாய் கிடைத்துள்ளது.


latest tamil news


கடந்த ஆண்டை விட, 12 சதவீதம் குறைவான நிதியையே, ரயில்வே நிர்வாகம், இந்த ஆண்டு செலவு செய்துள்ளது. குறைந்த ரயில்கள் மட்டுமே இயங்குவதால், செலவு குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
27-டிச-202013:25:37 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy சரக்கு போக்குவரத்தில் கவனம் செலுத்தலாம், உள்ளூர் மின்சார ரயில்களில் வருமானம் அதிகம் அதை முழுமையாக அதிகரிக்கலாம்
Rate this:
Cancel
27-டிச-202011:00:27 IST Report Abuse
தமிழ் அதனால அந்த இழப்பை வேற ஏதாவதுல சரிக்கட்ற ஐடியாவுல இருக்கீங்களா.
Rate this:
Cancel
27-டிச-202010:58:44 IST Report Abuse
தமிழ் விடுங்க பாஸ்.பெட்ரோல் டீசல் இருக்க பயமேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X