டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020
Share
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிச., 28 முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



latest tamil news


தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிச., 28 முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


டிச., 29 மற்றும் 30ல் கடலூர், தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X