பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ.,யின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: அறநிலையத்துறை கணினிமயமாக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016 செப்.,ல் அறிவித்தது தான் கடைசி அறிவிப்பு. இந்த அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது என்பது புரியாத புதிராக இருக்கும்போது மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.சட்டசபையில் அறநிலையத்துறை தொடர்பாக பேசிய ஜெயலலிதா, ''ரூ.ஒரு கோடியில் இத்துறை கணினிமயமாக்கப்படும்' என்றார். பிறகு அவருக்கு உடல்நலம்
அறநிலையத்துறை, கணினிமயம், மத்தியஅரசு, விருது, ஜெயலலிதா

சென்னை: அறநிலையத்துறை கணினிமயமாக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016 செப்.,ல் அறிவித்தது தான் கடைசி அறிவிப்பு. இந்த அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது என்பது புரியாத புதிராக இருக்கும்போது மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.

சட்டசபையில் அறநிலையத்துறை தொடர்பாக பேசிய ஜெயலலிதா, ''ரூ.ஒரு கோடியில் இத்துறை கணினிமயமாக்கப்படும்' என்றார். பிறகு அவருக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். அவர் அறிவித்தபடி இத்துறை இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படவில்லை. இச்சூழலில் மத்திய அரசு விருதுக்கு இத்துறை தேர்வாகியுள்ளது.


குழப்பத்தில் அறநிலையத்துறை ஊழியர்கள்



இது குறித்து அறநிலையத்துறை ஊழியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கோயில் தொடர்பான வரலாறு, சிறப்புகள், வருமானம், புகார்கள், அதுதொடர்பான நடவடிக்கைகள், வருமானம், சொத்து, வழக்கு விபரங்கள் என அனைத்து வித தகவல்களையும் கொண்ட சாப்ட்வேர் இன்னும் உருவாக்கவில்லை.


latest tamil news



கணினிமயமாக்கலுக்கு இதுதான் அடிப்படை. ஆனால் எல்லாமே வெப்சைட் அளவில் உள்ளது. பத்திரப்பதிவு துறையில் பெரும்பாலான சான்றுகளை ஆன்லைனில் பெறும் வசதி உள்ளது. அறநிலையத்துறையிலும் ஆன்லைன் வசதிகள், விபரங்கள் பெறுவது கணினிமயமாக்கலின் ஒருபகுதி. அதற்கு அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது எந்த அளவிற்கு உள்ளது என்ற விபரம் இதுவரை துறை சார்பில் வெளியிடப்படவில்லை. ஜெ., அறிவிப்புக்கு முன் எப்படி நிர்வாக பதிவேடுகள் பராமரிக்கப்பட்டதோ அதைதான் இன்னும் பராமரித்து வருகிறோம். இச்சூழலில் கணினிமயமாக்கப்பட்டதற்காக மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் வீட்டை கண்ணிலே காணாதவர்களுக்கே வீடு கிடைத்து விட்டதாக லெட்டர் வரும் மத்திய அரசின் செயல்பாடுகளின் லக்ஷணத்தை அடிக்கடி இப்படித்தான் பறைசாற்றுகிறார்கள் அதை வைத்து இங்கே சிலர் குளிர் காய பார்க்கிறார்கள் ஆனாலும் தமிழக வாக்காளர்கள் என்னவோ தெளிவாகவே உள்ளனர் வெகு சில அபிஷ்ட்டுகள்தான் ......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-202023:10:49 IST Report Abuse
தமிழவேல் சரி ஓகே...ஓகே. வேற எதுக்காவது குடுக்கணும்னா சொல்லுங்க குடுத்துடுவோம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-டிச-202023:08:13 IST Report Abuse
Rajas நல்லவேளை சிலைகளை காப்பாற்றி வரும் அரிய துறை என்று அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விருதும் ஜனாதிபதி பதக்கமும் கொடுக்காமல் விட்டார்களே. சரி அந்த சிலை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாம் இன்னமும் சஸ்பெண்ட்டில் தான் இருக்கிறார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X