பொது செய்தி

தமிழ்நாடு

பரமபதவாசல் வழியாக ஜன.,3 வரை 'வைகுண்ட வாசனை' தரிசிக்கலாம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஈரோடு: கோட்டை அரங்கநாதர் கோவிலில், 'வைகுண்ட வாசன்' பெருமாளை, பரமபதவாசல் வழியாக, ஜன.,3 வரை, பக்தர்கள் தாராளமாக தரிசிக்கலாம்.ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு, கடந்த, 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு நடந்தது. பரமபத வாசல் வழியாக வந்த பரந்தாமன், கமலவல்லி தாயார் சன்னதி அருகில், விழா மண்டபத்தில் அருள்பாலித்து வருகிறார். வைகுண்டத்தில் இருந்து

ஈரோடு: கோட்டை அரங்கநாதர் கோவிலில், 'வைகுண்ட வாசன்' பெருமாளை, பரமபதவாசல் வழியாக, ஜன.,3 வரை, பக்தர்கள் தாராளமாக தரிசிக்கலாம்.
ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு, கடந்த, 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு நடந்தது. பரமபத வாசல் வழியாக வந்த பரந்தாமன், கமலவல்லி தாயார் சன்னதி அருகில், விழா மண்டபத்தில் அருள்பாலித்து வருகிறார். வைகுண்டத்தில் இருந்து பரமபதவாசல் வழியாக பூலோகம் வந்த பெருமாள், அங்கு திரும்பி செல்லும் வரை, பரமபத வாசல் திறந்திருக்கும் என்பது ஐதீகம். இதன்படி கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பரமபத வாசல், வரும், ஜன.,3 வரை திறந்திருக்கும். அன்றைய தினம் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் சேவை சாதிக்கிறார். இரவு, 7:00 மணிக்கு நம்மாழ்வார் மோட்சத்துடன், பரமபத வாசல் மூடும் நிகழ்வுடன், ஏகாதசி விழா நிறைவுக்கு வரும்.

கைவிடப்பட்ட ஆன்லைன் முறை: ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில், வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். நடப்பாண்டு கொரோனா பரவலால், கூட்டத்தை குறைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், ஆன்லைன் பதிவை அறிமுப்படுத்தியது. ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் பிரின்ட் படிவத்துடன், கடும் பனியில் பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், கோவிலின் 'டோனர்' என்று கூறி, பலர் தடையின்றி தாராளமாக சென்றனர். இதனால் கொட்டும் பனியில் காத்திருந்த பக்தர்கள், இது டோனருக்கான கோவிலா? அல்லது பக்தர்களுக்கான கோவிலா? என முணுமுணுத்தனர். இந்நிலையில், நேற்று பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் ஆன்லைன் பதிவு நடைமுறை கைவிடப்பட்டது. மூலவர் தரிசனத்துக்கும் சாதாரண பக்தர்களுக்கு அனுமதி தரப்பட்டது. இதனால் வழக்கம்போல் தரிசனம் செய்தனர். அதேசமயம் கொரோனா சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதிலும், கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் சிரத்தை காட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X