ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 511 ஆனது. அதேசமயம், 44 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், 13 ஆயிரத்து, 88 ஆக குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்தது.
* சென்னிமலை அருகே சீரங்கம்பாளையத்தில் ஒரே குடும்பத்தில், 50-45 வயது தம்பதியர், 20 வயது மகள், கணவரின், 55 வயது சகோதரி என, நான்கு பேருக்கு, நேற்று தொற்று பாதிப்பு உறுதியானது. நான்கு பேரும் அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE