சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், டிச., 29ல், ஆருத்ரா தரிசன அபி?ஷகத்தை காண, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சேலம், சுகவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சுகவனேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, டிச., 29 இரவு அபி ?ஷகம், 30 காலை, 6:00 மணிக்கு தரிசனம் நடக்க உள்ளது. அதில், ஸ்ரீநடராஜர் அபி?ஷக நிகழ்ச்சி, 'யு-டியூப்' சேனலில் ஒளிபரப்பப்படும். நேரில் தரிசிக்க அனுமதியில்லை. டிச., 30 காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 65 வயதுக்கு மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதய நோய் உள்ளவர், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதியில்லை. அபி?ஷக பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE