கழிவுநீர் குளமாக மாறிய சாலை; தடுமாறி விழும் வாகன ஓட்டிகள்

Added : டிச 27, 2020
Share
Advertisement
சேலம்: தம்மண்ணன் சாலையில் ஓடும் கழிவுநீரால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். சேலம் மாநகராட்சியில், பல்வேறு பகுதிகளில், சீர்மிகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், மழைநீர் வடிகால், கேபிள் அமைக்க பாதை, பாதாள சாக்கடை, நடைபாதை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைத்து, சாலை அமைக்கப்படுகிறது. சத்திரம், மேம்பால பகுதியிலிருந்து, நான்கு ரோடு பகுதிக்கு வர,

சேலம்: தம்மண்ணன் சாலையில் ஓடும் கழிவுநீரால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். சேலம் மாநகராட்சியில், பல்வேறு பகுதிகளில், சீர்மிகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், மழைநீர் வடிகால், கேபிள் அமைக்க பாதை, பாதாள சாக்கடை, நடைபாதை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைத்து, சாலை அமைக்கப்படுகிறது. சத்திரம், மேம்பால பகுதியிலிருந்து, நான்கு ரோடு பகுதிக்கு வர, பிரதான சாலையாக உள்ள தம்மண்ணன் சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாக்கடை கால்வாய் மாற்றிவிடப்பட்டுள்ளது. இதில் வெளியேறும் கழிவுநீர், சாலையில், ஆங்காங்கே உள்ள பள்ளமான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் பிரதான சாலையில், மிக மந்த நிலையில் பணி நடப்பதால், மக்களின் அவதி தொடர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X