பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு

Added : டிச 27, 2020
Share
Advertisement
மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி அருகே, விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பை, தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த திம்லாமேட்டை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 56. இவர், நேற்று தன் நிலத்தில் சாகுபடி செய்துள்ள கால்நடை தீவனத்தை அறுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று புகுந்திருந்ததை கண்ட அவர், இதுகுறித்து, பாலக்கோடு தீயணைப்புத்

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி அருகே, விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பை, தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த திம்லாமேட்டை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 56. இவர், நேற்று தன் நிலத்தில் சாகுபடி செய்துள்ள கால்நடை தீவனத்தை அறுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று புகுந்திருந்ததை கண்ட அவர், இதுகுறித்து, பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்படி சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர், நிலத்திலிருந்த, 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். பினைர் அதை பெல்ரம்பட்டி காப்புக்காட்டில் விட்டனர். விவசாய நிலத்தில் மலைப்பாம்பு புகுந்த சம்பவம், திம்லாமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X