மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு தீர்மானம்

Added : டிச 27, 2020
Share
தர்மபுரி: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கி வரும் ஊதியத்தை போல், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, தர்மபுரியில் நடந்த ஆசிரியர் சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் இடைநிலை

தர்மபுரி: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கி வரும் ஊதியத்தை போல், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, தர்மபுரியில் நடந்த ஆசிரியர் சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கி வரும் ஊதியத்தை போல் அதற்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். 2021க்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X