நல்லம்பள்ளி: பருவமழை காலத்திலும், பட்டகப்பட்டி ஏரி வறண்டுள்ளதால், இதை நம்பி பாசன வசதி பெற்ற, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி, நல்லம்பள்ளி அடுத்த பட்டகப்பட்டி ஏரிக்கு, கடந்த காலங்களில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், குறிப்பிடத்தக்க வகையில் தண்ணீர் வரத்து இருந்தது. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும், பல நூறு ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில், நல்லம்பள்ளியின் பல்வேறு பகுதிகளில் பெய்த பருவமழையால், பல ஏரிகளுக்கு குறிப்பிட வகையில் தண்ணீர் வந்ததால், இதை நம்பிய உள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால், பட்டகப்பட்டி ஏரிக்கு, பருவமழையிலும் தண்ணீர் வரத்து இல்லை. இதனால், இந்த ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஏரி மற்றும் அதற்கு தண்ணீர் வரும் வாய்க்காலில், முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து, புதராக காணப்படுகிறது. தமிழக அரசு, பட்டகப்பட்டி ஏரி மற்றும் அதன் வாய்க்காலில் உள்ள, புதர்களை அகற்றுவதுடன், நல்லம்பள்ளியில் உள்ள ஏரி, குளங்களை இணைக்கும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும் என, பட்டகப்பட்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE