தர்மபுரி: தர்மபுரியில், ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், சரிவர இயங்காத, பயோ மெட்ரிக் மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் பயன்படுத்தி வரும் பயோ மெட்ரிக் மிஷின்கள், சரிவர இயங்காததால், ஊழியர்கள் பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை கண்டித்து, பயோமெட்ரிக் மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலகம் முன், பயோ மெட்ரிக் மிஷின்களை கையில் ஏந்தியபடி, ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொங்கல் தொகுப்பு வழங்குவதற்குள், பயோ மெட்ரிக் மிஷின் பழுதுகளை சரி செய்து தர வேண்டும். அதே மிஷினில் கண் விழித்திரைகளை பதிவு செய்து பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர். இதில், வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ராதா, சுகுணா ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE