அரூர்: தீர்த்தமலையில் உள்ள மலைக்கோவிலுக்கு, செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தினமும், 1,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக, முதியவர்கள் மலை ஏற மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சேதமான பாதையை சீரமைப்பதுடன், செல்லும் வழியில் குடிநீர் வசதி மற்றும் மலை அடிவாரத்தில் பூட்டியுள்ள கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE