ஓசூர்: ஓசூர் அருகே, கால்நடை மருத்துவமனை டாக்டர் வீட்டில், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நகை திருட்டு போன போதும், போலீசார் வழக்குப் பதியாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் அடுத்த மத்திகிரி சுதர்சன் நகரை சேர்ந்தவர் செந்தில், 37. பென்னங்கூர் அரசு கால் நடை மருந்தகத்தில் டாக்டராக உள்ளார்; இவரது மனைவி ஜோஸ்பின், 30, கெலமங்கலம் கால்நடை மருந்தகத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இருவரும், காலையில் பணிக்கு சென்று விடுவதால், வீட்டு வேலைக்கு மாற்றுத்திறனாளி பெண் ஷோபா, 36, என்பவரை நியமித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டாக்டர் வீட்டு பீரோவில் உள்ள, பணம், நகை அடிக் கடி திருட்டு போனது. கடந்த, 21ல், வீட்டிலுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை பார்த்தபோது, ஷோபா, பீரோவை திறந்து பணத்தை திருடியது தெரிந்தது. இதுவரை, மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மற் றும் ஏழரை பவுன் நகை திருட்டு போனதாக, மத்தி கிரி போலீசில் டாக்டர் செந்தில் புகார் செய்தார். 'சிசிடிவி' கேமரா பதிவு இருந்தும், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், டாக்டரை அலைக்கழித்து வருகின்றனர். இது குறித்து, மாவட்ட எஸ்.பி., தலையிட்டு, உடனடியாக வழக்குப்பதிவு செய்ய, டாக்டர் குடும் பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE