பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., முதுகில் பா.ஜ., சவாரி: இ.கம்யூ., மகேந்திரன் பேட்டி

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஓசூர்: ''அ.தி.மு.க., முதுகில் ஏறி சவாரி செய்யும், பா.ஜ., பல கனவுகளோடு உள்ளது,'' என, இ.கம்யூ., தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில், இ.கம்யூ., கட்சியின், 96வது அமைப்பு நாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சிவப்பு கம்பளம் விரித்துள்ள மோடி அரசை எதிர்த்து, இளைஞர்கள் களத்தில்

ஓசூர்: ''அ.தி.மு.க., முதுகில் ஏறி சவாரி செய்யும், பா.ஜ., பல கனவுகளோடு உள்ளது,'' என, இ.கம்யூ., தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில், இ.கம்யூ., கட்சியின், 96வது அமைப்பு நாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சிவப்பு கம்பளம் விரித்துள்ள மோடி அரசை எதிர்த்து, இளைஞர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும். அ.தி.மு.க.,வின் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டிருக்கும், பா.ஜ., பல கனவுகளோடு உள்ளது. அதையும், அதை சுமந்து கொண்டிருக்கும், அ.தி.மு.க.,வையும், தமிழக மக்கள், வரும் தேர்தலில் முறியடிப்பர். நடிகர் ரஜினி உடல் நலம்பெற வாழ்த்துகிறேன். உழைக்கும் மக்கள், பாடுபடக்கூடிய மக்கள், எளிய மக்களுக்கு பயன்படக்கூடியதாக அரசியல் இருக்க வேண்டும். ஆனால், திரைப்பட நடிகர்கள், எளிய மக்களுக்கு பெரிய மாற்றத்தை செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. தமிழகத்தில், பல ஆயிரம் மக்கள் பசி, பட்டினியாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில குழு உறுப்பினர் லகுமையா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X