பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து பயிற்சி

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் வட்டார வேளாண்மைத்துறை மூலம், ஜே.காருப்பள்ளி கிராமத்தில், அட்மா திட்டத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. கிருஷ்ணகிரி வேளாண் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சண்முகம், மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் பயன்கள் குறித்து விளக்கினார். கெலமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜான்லூர்து

ஓசூர்: கெலமங்கலம் வட்டார வேளாண்மைத்துறை மூலம், ஜே.காருப்பள்ளி கிராமத்தில், அட்மா திட்டத்தில், தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. கிருஷ்ணகிரி வேளாண் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சண்முகம், மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் பயன்கள் குறித்து விளக்கினார். கெலமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜான்லூர்து சேவியர், வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை துணை அலுவலர் வெற்றிவேல், இயற்கை விவசாயம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், மண்வள அட்டையின் பரிந்துரையின்படி, உரமிடுதல் குறித்தும், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கீதா, விதை நேர்த்தி செய்யும் முறை மற்றம் அதன் பயன்கள் பற்றியும் விளக்கினர். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவனேசன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X