சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தின் அடர்ந்த வனத்தின் வழியே, ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கூலி தொழிலாளியின் மனைவிக்கு, இரட்டை குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, கடம்பூர் மலை, மாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சிவா, 30; இவரின் மனைவி அமுதா, 24; நிறைமாத கர்ப்பிணி. நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர், 108 அவசர கால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். கிராமத்துக்கு சென்ற வாகனம், அவரை அழைத்துக்கொண்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு, அடர்ந்த வனப்பகுதி வழியே சென்றுகொண்டிருந்தது. அமுதா பிரசவ வலி தாங்க முடியாமல் துடித்ததால், டிரைவர் கோகுல கிருஷ்ணன், வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் பயணித்த, மருத்துவ உதவியாளர் தேவராஜ் பிரசவம் பார்த்தார். ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து தாய், குழந்தைகளுடன் புறப்பட்ட வாகனம், சத்தி அரசு மருத்துவமனையை அடைந்தது. அங்கு பரிசோதனை, முதலுதவி சிகிச்சைக்குப் பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையறிந்த மலை கிராம மக்கள், மருத்துவ உதவியாளர், டிரைவருக்கு பாராட்டு தெரிவித்தனர். டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களும் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE