பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அ.தி.மு.க., பிரமுகர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு டோக்கன்

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், மணல்மேடு, பெரியார் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், அப்பகுதி அ.தி.மு.க., பிரமுகர் அலுவலகம், வீடுகளில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில், 7.11 லட்சம் அரிசி கார்டுகளுக்கு நேற்று முதல், ஜன., 3 வரை அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. வரும், 4 முதல் பொங்கல் பரிசான, 2,500 ரூபாய் ரொக்கப்பணம், அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள்

ஈரோடு: ஈரோட்டில், மணல்மேடு, பெரியார் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், அப்பகுதி அ.தி.மு.க., பிரமுகர் அலுவலகம், வீடுகளில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்டத்தில், 7.11 லட்சம் அரிசி கார்டுகளுக்கு நேற்று முதல், ஜன., 3 வரை அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. வரும், 4 முதல் பொங்கல் பரிசான, 2,500 ரூபாய் ரொக்கப்பணம், அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில், 18 ஆயிரம் ரேஷன் கார்டுகள் மட்டும் சர்க்கரை பெறும் கார்டு மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டாக உள்ளன. நேற்று முதல், பெரும்பாலான ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கினர். சில கடைக்காரர்கள் மட்டும், வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கினர். ஈரோடு மாநகர பகுதியில், மணல்மேடு பகுதியில், ரேஷன் கடை எண்:9 மற்றும் அங்குள்ள மற்றொரு ரேஷன் கடைக்கான டோக்கன், சென்னிமலை சாலையில் உள்ள, அ.தி.மு.க., மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் மணிகண்டன் என்பவர் அலுவலகத்தில் வரிசையில் நின்று பெற்று சென்றனர். இங்கு, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட வேண்டும் எனக்கூறி, டோக்கன் வழங்குவதாக புகார் எழுந்தது; ஆனாலும், கட்சியினர் டோக்கன் வழங்குவதை காண முடிந்தது. டோக்கனை, அ.தி.மு.க., அலுவலகத்தில் வழங்குவது பற்றி, 9ம் எண் கடைக்காரரிடம் கேட்டபோது, 'கட்சிக்காரர்கள் கேட்கின்றனர். டோக்கன் தர முடியாது என்று கூற முடியுமா. கடையில் வைத்து வழங்க வசதி இல்லை' என்றார்.

ஈரோடு வட்ட வழங்கல் அலுவலர் ஜாகீரிடம் கூறியபோது, ''என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார். சிறிது நேரத்துக்குப்பின் பேசிய வட்ட வழங்கல் அலுவலர் ஜாகீர், ''உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்று, டோக்கன் மொத்தத்தையும் வாங்கி, கடைக்காரரிடம் கொடுத்து, 'வீடு, வீடாகத்தான் கொடுக்க வேண்டும்' என கண்டித்து கூறிவிட்டு வந்தேன். இதுபற்றி, டி.ஆர்.ஓ., மேடத்திடமும் கூறிவிட்டேன். கடைக்காரர் மீதான நடவடிக்கையை, மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது டி.ஆர்.ஓ.,தான் எடுக்க வேண்டும். இதுபற்றி, எனக்குத்தெரியாது,'' என்றார். இதுபற்றி டி.ஆர்.ஓ., கவிதா கூறுகையில், ''விசாரித்து, நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார். இதேபோல, பெரியார் நகர், சாந்தான் கருக்கு உட்பட பல பகுதியில், அப்பகுதி அ.தி.மு.க.,வினர் மொத்தமாக டோக்கனை வாங்கி, வினியோகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X