மதுரை : மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான குங்பூ போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் ஜூனியர் சண்டை பிரிவில் நித்ய மீனாட்சி, அயத் அக்ராஷினி, ஷோபிகா தேவி ஆகியோரும், சப் ஜூனியர் பிரிவில் வர்ஷா, ஜனனி, ஆப்ரின் ஆல்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் வென்றனர். ஆயுத போட்டி பிரிவில் ேஷாபிகா தேவி முதலிடம் பெற்றார்.9 வயதுக்குட்பட்ட ஆண்கள் சண்டை பிரிவில் அதியன் முதலிடம், அர்ஜூனன் அமர்நாத் 2ம் இடம், சூர்ய குமரன் மற்றும் நித்தின் பொன்தேவ் 3ம் இடம் பெற்றனர். சப் ஜூனியர் பிரிவில் அப்துர் ரஹ்மான் முதலிடம், சிவ சரண் 2ம் இடம், இசை கிருஷ்ணன் மற்றும் ரியான் ஒயிட் 3ம் இடம் பெற்றனர். சீனியர் பிரிவில் முகம்மது ஆப்ரின் முதலிடம், இப்ராகிம் மூசா 2ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய குங்பூ சங்கத் தலைவர் சிஜோ சரவணன் பரிசு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE