மேலுார் : மேலுார் தாலுகாவில் கொரோனா பாதிப்பால் கரும்பு குறைந்த விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தாலுகாவில் எட்டிமங்கலம், சா.நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 15 கரும்புகளை கொண்டது ஒரு கட்டு. ஒரு மாட்டு வண்டிக்கு 20, ஒரு லாரிக்கு 300, டாரஸ் லாரிக்கு 450 கட்டுகள் ஏற்றப்படும். தற்போது ஒரு கட்டு கரும்பு விலை ரூ.125 க்கு விற்பனையாகிறது.தனியாமங்கலம் விவசாயி ராமநாதன் கூறியதாவது: கரும்பு விதை நடவு முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் செலவானது. கொரோனாவால் குறைந்து விலைக்கு விற்பனையாவதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம். வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.
வியாபாரி துரைராஜ் கூறியதாவது: இங்கு செம்மண்ணில் விளையும் கரும்பு என்பதால் சுவை அதிகம். கரும்பின் வளர்ச்சி மற்றும் நிறத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து குஜராத், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்வோம். கொரோனா பாதிப்பால் விற்பனையாகவில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE