ஆஸி.,க்கு எதிராக கேப்டன் ரகானே சதம்; முன்னிலைப் பெற்ற இந்தியா

Added : டிச 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்தது. கேப்டன் ரகானே சதம் அடித்தார்.இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ‛டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய
AUSvIND, AjinkyaRahane, Century, India, Lead, Jadeja

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்தது. கேப்டன் ரகானே சதம் அடித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ‛டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 4 விக்., வீழ்த்தினார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்., இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.


latest tamil newsஇந்நிலையில் இன்று (டிச.,27) இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் (45), புஜாரா (17) சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர், கேப்டன் ரகானே உடன் இணைந்து விளையாடிய விஹாரி (21), ரிஷாப் பன்ட் (29) நிலைக்கவில்லை. அடுத்ததாக வந்த ஜடேஜா, ரகானேவுக்கு ஒத்துழைப்பு தந்து பொறுமையாக விளையாடினார். மறுபுறம் கேப்டன் ரகானே சதம் அடித்து அசத்தினார். 2ம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. ரகானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-202018:24:01 IST Report Abuse
Columbus He lends balance to the team as an all rounder.
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-202013:27:27 IST Report Abuse
krishna JADEJA IS A TERRIFIC PLAYER AND REALLY GREAT ASSET TO TEAM INDIA.NOT UTILISED PROPERLY. BATTING FIELDING BOWLING WHAT ELSE A CAPTAIN NEED.KEEP GOING.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X