நாமக்கல்: வரும், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஐந்து லட்சத்து, 22 ஆயிரத்து, 220 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு (ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை) மற்றும் ரொக்கத் தொகை, 2,500 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை, வரும், ஜன., 4 முதல், 12 வரை வழங்கப்படும். இந்த தேதிகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை பெறாத அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜன., 13ல், வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளில், சுழற்சி முறையில், பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்கும் நாள், நேரம் போன்ற விபரங்களை குறிப்பிட்டு, டோக்கன்கள், இன்று (நேற்று) துவங்கி, வரும், 30 வரை, வீடுதோறும் சென்று, ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில், ஏதாவது குறைபாடுகள் இருந்தால், நாமக்கல் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு, 04286 -281116 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE