பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.30க்கு விற்பனை

Added : டிச 27, 2020
Share
Advertisement
கரூர்: தொடர் மழை காரணமாக, சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. கரூரில், கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த, அக்டோபர் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்தனர். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடவூர், தோகைமலை, குளித்தலை

கரூர்: தொடர் மழை காரணமாக, சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. கரூரில், கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த, அக்டோபர் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்தனர். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடவூர், தோகைமலை, குளித்தலை பகுதிகளில், சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும், மூட்டை மூட்டையாக கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வருகிறது. இதனால், கரூர் நகரப்பகுதிகளில் தள்ளுவண்டியில், ஒரு கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: தை மாதங்களில்தான் சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனைக்கு வரும். விளைச்சல் அதிகரித்துள்ளதால், முன் கூட்டியே விற்பனைக்கு வந்து விட்டது. கடந்தாண்டு, ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, அளவு பெரிதாக இருந்தாலும், 30 ரூபாய்க்கு தான் கூவி கூவி விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X