அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல், புரசல் அரசியல்; ஸ்டாலின் லண்டன் பயணம் மீண்டும் ரத்து!

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
உடல் ரீதியான சில பிரச்னைகளுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் லண்டனில், ‛ட்ரீட்மெண்ட்' எடுத்து வருகிறார். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனைக்காக அவர், லண்டன் போகணுமாம்... ஆனால், கொரோனா பரவியபடியே இருந்ததால், அவரால் லண்டன் போக முடியவில்லலை. மருத்துவர்களிடம் போனில் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில, அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி
அரசல்_புரசல்_அரசியல், ஸ்டாலின், லண்டன்_பயணம், ரத்து

உடல் ரீதியான சில பிரச்னைகளுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் லண்டனில், ‛ட்ரீட்மெண்ட்' எடுத்து வருகிறார். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனைக்காக அவர், லண்டன் போகணுமாம்... ஆனால், கொரோனா பரவியபடியே இருந்ததால், அவரால் லண்டன் போக முடியவில்லலை. மருத்துவர்களிடம் போனில் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில, அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி மயக்கமாகிட்டார். அதனால், குடும்பத்தினர் ஆலோசனைபடி, தேர்தல் நெருங்குவதற்குள், லண்டன் போய் மருத்துவர்களை சந்திக்க, ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். ஆனால், இப்போ லண்டனில் மறுபடியும் கொரோனா விஸ்வரூபம் எடுத்துட்டு வர்றதால, இந்த முறையும் ஸ்டாலின் லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டார்...!


latest tamil newsபல அமைச்சர்களுக்கு ‛சீட்' கிடையாது!


அமைச்சராக செயல்பாடுகள், கட்சி வளர்ச்சியில் ஈடுபாடு, பொதுமக்கள் நெருக்கம்னு, பல்வேறு விஷயங்கள்ல அமைச்சர்களை மதிப்பீடு செய்து, சில அமைச்சர்களுக்கு மறுபடியும் சீட் தர வேண்டாம்னு, முதல்வர் முடிவெடுத்துள்ளாராம்... தன்னை சந்திக்க வந்தபோது, இதை ஜாடை மாடையாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமே முதல்வர் சொல்லிட்டாராம். ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல்னு பல பகுதிகள்ல இருக்கிற அமைச்சர்களுக்கும், ஒரு பெண் அமைச்சருக்கும் சீட் கிடைக்காதுன்னு சொல்றாங்க...!


ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதிரடி முடிவு!


ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலரா இருந்து, அதிகாரத்தைச் செலுத்தியவர், ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ்., ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரரான அவருக்கு, ஓய்வு பெற்ற பின், அரசியல் ஆசை வந்து, ஆர்.எம்.ஆர்., பேரவைங்கற அமைப்பை துவக்கி, தமிழகத்துல பல ஊர்களிலும் நிறைய செலவு செய்து, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர், அந்தணர் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்துடன் சேர்ந்து, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலில் நூறு தொகுதிகளில் போட்டியிட, முடிவு செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
03-ஜன-202110:01:37 IST Report Abuse
Indhuindian ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நாளொரு மேனியும் போஸுதொரு வண்ணமுக்காக அறிக்கைவிட்டு அவங்க உடல்நிலைய பத்தி முஷு தகவல் குடுக்கணும்ன்னு அஷிச்சாட்டியம் பண்ணவங்க இப்போ அவங்க கட்சியோட முதல் அமைச்சர் வேட்பாளருக்கு என்ன கோளாறு என்பதை சொல்ல வேண்டாமா? வெளியில் தெரிந்த கோளாறு துண்டு சீட்டை கூட பார்த்து சரியா படிக்க முடியாது ஆனா மத்தபடி ஒண்ணுமே ஜனங்களுக்கு தெரியாதே விழா வாரியா சொல்லிடுங்க
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
28-டிச-202017:05:27 IST Report Abuse
karutthu அந்தணர் முன்னேற்ற கட்சி என்று எதுவும் தமிழ் நாட்டில் இல்லை
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
28-டிச-202005:06:31 IST Report Abuse
Siva Kumar அப்ப சுடலை இன்னும் தேதி குறிக்கலைன்னு சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X