ஜெனிவா: காலநிலை மாற்றத்தை கவனிக்க தவறினால் அழிவு நிச்சயம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் டிசம்பர் 27 சர்வதேச நோய் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியதாவது: கொரோனா தொற்று பாதிப்பு என்பது கடைசி பேரிடர் இல்லை என்பதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. தொற்றுநோய் மனிதர்கள், விலங்குகள் மற்றும் புவி ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ள புவியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் குறித்து கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம். பேரிடர்களைக் கட்டுப்படுத்த பணத்தைப் பயன்படுத்தும் குறுகிய பார்வை மட்டுமே நம்மிடம் உள்ளது. அவை நிரந்தர தீர்வு இல்லை. தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் பின் தங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE