விவசாயிகள் பிரச்னை: அன்று ராகுல் பேசியது என்ன? போட்டு உடைத்த நட்டா

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி:''இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக தொழில் நிறுவனங்களில் விற்க வேண்டும்,'' என லோக்சபாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள பா.ஜ., தலைவர் நட்டா, விவசாயிகள் பிரச்னையில் ராகுல் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு

புதுடில்லி:''இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக தொழில் நிறுவனங்களில் விற்க வேண்டும்,'' என லோக்சபாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள பா.ஜ., தலைவர் நட்டா, விவசாயிகள் பிரச்னையில் ராகுல் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.latest tamil newsமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் வேளாண் சட்டத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: என்ன மாயம் நடந்தது ராகுல். முன்னர் எதற்காக வாதாடினீர்களோ, தற்போது அதனை எதிர்த்து வருகிறீர்கள். நாடு மற்றும் விவசாயிகள் நலனுக்காக நீங்கள் எதுவும் செய்தது இல்லை. அரசியல் மட்டும் செய்கிறீர்கள். உங்களின் துரதிர்ஷ்டம், உங்களின் போலித்தனம் வேலை செய்யவில்லை. உங்களின் இரட்டை வேடத்தை நாட்டு மக்களும், விவசாயிகளும் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார்.


latest tamil newsமேலும், உ.பி.,யின் அமேதி தொகுதி எம்.பி.,யாக ராகுல் இருந்த போது, ராகுல் லோக்சபாவில் பேசிய வீடியோவையும் நட்டா வெளியிட்டுள்ளார்.

ये क्या जादू हो रहा है राहुल जी?
पहले आप जिस चीज़ की वकालत कर रहे थे, अब उसका ही विरोध कर रहे है।
देश हित, किसान हित से आपका कुछ लेना-देना नही है।आपको सिर्फ़ राजनीति करनी है।लेकिन आपका दुर्भाग्य है कि अब आपका पाखंड नही चलेगा। देश की जनता और किसान आपका दोहरा चरित्र जान चुके है। pic.twitter.com/Uu2mDfBuIT

— Jagat Prakash Nadda (@JPNadda) December 27, 2020
அன்று ராகுல் பேசியது என்ன

அந்த வீடியோவில் ராகுல் பேசியுள்ளதாவது: சில ஆண்டுகளுக்கு முன், நான் உத்தரபிரதேசத்தில் இருந்த போது, ஒரு விவசாயியிடம், விவசாயிகள் உருளைக்கிழங்கை கிலோ 2 ரூபாய்க்கு விற்கும் போது, உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ரூ.10க்கு விற்கப்படுவதன் மாயம் என்ன? என்ன காரணமாக இருக்கும் என கேட்டேன். அதற்கு அவர், தொழிற்சாலைகளில் வெகுதொலைவில் இருக்கின்றன.
நாங்களே நேரடியாக உற்பத்தி பொருட்களை தொழிற்சாலைகளில் விற்றால், இடைத்தரகர்கள் இன்றி முழுப்பணத்தையும் பெறமுடியும். ஆதலால், உணவுப்பூங்கா அமைக்க வேண்டும் என்றார். இதற்காக அமேதி மற்றும் உ.பி.,யின் 10-12 மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் தெரிவித்துள்ளார்.ஜேபி நட்டா வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை கருகும் - சென்னை,இந்தியா
28-டிச-202017:00:16 IST Report Abuse
தாமரை கருகும் அரசே கொள்முதல் செய்வதற்கும் காற்பரெட்டு செய்வதற்கும் வேறுபாடு தெரியாத
Rate this:
Cancel
bbbb -  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-202007:30:22 IST Report Abuse
bbbb Mr natta, your own PM and party also had different opinion in aadhar system and gst before capturing of PM. so what is your answer for that. if you have doubts, please check the videos of 2013
Rate this:
Cancel
abcd -  ( Posted via: Dinamalar Android App )
28-டிச-202007:26:34 IST Report Abuse
abcd Bjp mr. modi also have dual stand before pm and after pm in Aadhar cardGstthere are videos about Mr. modi speech against aadhar, gst before he sworn as pm
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X