ஹூஸ்டன்:அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹிந்து சமுதாயம் மற்றும் கலாசார வளர்ச்சிக்காக உழைத்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 10 இளைஞர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
![]()
|
அமெரிக்காவின் ஹூஸ்டனில், ‛ஹிந்துஸ் ஆப் கிரேட்டர் ஹூஸ்டன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில், ஹிந்து மதத்தின் பெருமைகள், கலாசார மதிப்பீடுகளை, வெளி உலகம் அறியும் வகையில், பல்வேறு வகையிலும் பரப்பி, அதன் வளர்ச்சிக்காக உழைத்து வரும், இந்திய வம்சாவளியை சேர்ந்த, 10 இளைஞர்களை தேர்ந்தெடுத்து, இந்த அமைப்பு விருது வழங்கியது.
![]()
|
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஹூஸ்டனை சேர்ந்த, இந்திய துாதரக அதிகாரி அசீம் மஹாஜன், விருதுகளை வழங்கினார்.விருது பெற்ற இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், 'விருது பெற்றுள்ள இளைஞர்கள், ஹிந்து மதத்தின் அடையாளங்களும், பெருமைகளும், வெளிநாட்டில் வசிக்கும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் சென்று சேர பாடுபடுவர்' என, நம்புவதாக தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE